ரணில் அம்பாறை வரப் போகிறார்: ஹரீஸ் ஆறுதல்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 28 February 2018

ரணில் அம்பாறை வரப் போகிறார்: ஹரீஸ் ஆறுதல்!



அம்பாறையில் இனவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் சட்ட,ஒழுங்கு அமைச்சுப் பொறுப்பையும் ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க அங்கு நேரடியாக பார்வையிட வரப்போவதாக தெரிவிக்கிறார் பிரதியமைச்சர் ஹரீஸ்.


யானைப் பாகர்களாகத் தம்மை வர்ணித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய தலைவரான ஹரீஸ் சம்பவ இடத்திற்குச் சென்ற போது அவரை பேச விடாமல் தடுத்ததோடு கையிலிருந்த ஒலிவாங்கியும் பறிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை 3ம் திகதி அம்பாறைக்கு விஜயம் செய்யப் போவதாக ஹரீஸ் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment