அம்பாறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலை உடைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லாத நிலையிலும், எதுவிதக் காரணங்களுமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்து தகர்த்துள்ளதாக தெரிவிக்கிறார் ரிசாத் பதியுதீன்.
ஆட்சியின் பங்காளியான முஸ்லிம் அமைச்சர்கள் இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் இவ்வாறு தெரிவித்துள்ள ரிசாத், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
அளுத்கம வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடும் இதுவரை வழங்கப்படவில்லையென்பது சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment