அம்பாறையில் நள்ளிரவில் ஏற்பட்ட சம்பவத்தில் சர்ச்சைக்குள்ளான உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் மாத்திரை காணப்பட்டது காரணம் என இனவாதிகள் விளக்கமளித்துள்ளனர்.
உணவுக்குள் இவ்வாறு மாத்திரை காணப்பட்டதன் பின்னணியில் ஆத்திரம் கொண்டவர்களே உணவகத்தின் உரிமையாளரையும் தாக்கியதோ, அங்கிருந்த வாகனங்கள் மற்றும் அருகில் இருந்த பள்ளிவாசலையும் சேதப்படுத்தி எரியூட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தின் பின்னணியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் சம்பவம் நேரத்தில் பொலிசார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கவில்லையென பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment