அம்பாறை நகரில் நள்ளிரவில் இனவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதோடு பள்ளிவாசலும் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெருந்தொகையாக வந்த இனவாதிகள் அருகிலிருந்த உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தர்க்கத்தைத் தொடர்ந்து இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசலின் பகுதி மற்றும் வாகனங்களையும் எரியூட்டியுள்ளனர்.
அம்பாறை பொலிசுக்கு மிக அண்மையில் நள்ளிரவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment