ISIS வசமிருந்த முக்கிய நகரைக் கைப்பற்றியது ஈராக் - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 December 2015

ISIS வசமிருந்த முக்கிய நகரைக் கைப்பற்றியது ஈராக்


ஐ.எஸ் அமைப்பு வசமிருந்த ஈராக்கின் ரமடி நகரை மீளக் கைப்பற்றியுள்ளது ஈராக்கிய இராணுவம்.
தலைநகர் பக்தாதிலிருந்து 90 கி.மீ மேற்கே அமைந்துள்ள குறித்த நகரம் கடந்த மே மாதம் IS வசம் வீழ்ந்திருந்தது. இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அங்கு ஈராக்கிய இராணுவம் நிலை கொண்டுள்ளதோடு தமது நாட்டிலிருந்து ஐ.எஸ். விரட்டியடிக்கப்படும் என சூளுரைத்துள்ளார் ஈராக்கிய பிரதமர் ஹைதர் அல் அபாதி.

No comments:

Post a Comment