CCDயிடம் நாமல் ராஜபக்ச வாக்குமூலம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 December 2015

CCDயிடம் நாமல் ராஜபக்ச வாக்குமூலம்



நாமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்றது விமானப்படை அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்யும்படி நாமல் ராஜபக்சவின் பெயரில் தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு. 
சில வருடங்களுக்கு முன்பாக இடம்பெற்ற இச்சம்பவத்தில் விமானப்படைக் கட்டளைத் தளபதிக்கு நாமல் ராஜபக்சவின் பெயரில் தொலைபேசியில் உரையாடிய நபர் குறித்த விமானப்படை அதிகாரியொருவரை இடமாற்றம் செய்யும் படி அறிவுறுத்தியுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே நாமலிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. எனினும் அம்பாறை முன்னாள் பிரதேச சபைத் தலைவரே இவ்வாறு தொலைபேசியில் உரையாடியிருப்பதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment