யாராயிருந்தாலும் நேராக வாருங்கள்: ஜனாதிபதிக்கு கிடைத்த பதில் - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 December 2015

யாராயிருந்தாலும் நேராக வாருங்கள்: ஜனாதிபதிக்கு கிடைத்த பதில்


அண்மையில் தனக்கு புத்தகங்கள் சில தேவைப்பட்டதனால் ஒரு நூல் விற்பனை நிலையத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த போது தனக்கு கிடைத்த பதில் தொடர்பில் விபரித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

தான் ஜனாதிபதி உரையாடுவதாகவும் தனக்கு சில புத்தகங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்த போதிலும் யாராக இருந்தாலும் நேராக வாருங்கள் அல்லது யாரையாவது அனுப்புங்கள் என பதில் கிடைத்துள்ளது.

கொடகே வெளயீட்டகத்தைத்  தொடர்பு கொண்ட போதே இவ்வாறு ஒரு அனுபவம் கிடைத்ததாக ஜனாதிபதி இன்று கலந்து கொண்ட நிகழ்வொன்றில் வைத்து விபரித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment