70 இலட்சம் செலவில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட மாவனல்லை சாஹிரா கல்லூரி மைதானத்தின் நிலை
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும், அவர்களின் திறமைகளை வெளிக்காட்டு வதற்கும் சிறந்த மைதானங்கள் களமாக விளங்குகின்றது. அதற்கமைய மாவனல்லை சாஹிரா கல்லூரி மைதானத்தினை புணரமைக்க கடந்த அரசாங்கம் நிதி வழங்கியிருந்தது.
அந்த வகையில் மாவனல்லை சாஹிரா கல்லூரிக்கு 70 இலட்சம் ரூபாவும், மாவனல்லை பதுரிய கல்லூரிக்கு 30 இலட்சம் ரூபாவும் மற்றும் மாவனல்லை மயூரபாத கல்லூரி 40 இலட்சம் ரூபாவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போழு சாஹிரா கல்லூரி மைதானத்தினை பார்க்கும் போது 70 இலட்சம் ரூபா செலவில் என்ன புணர்நிர்மாணம் செய்துள்ளார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த மூன்று மைதானத்தினதும் புணரமைப்பு பணிகள் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
பொதுவாக பாடசாலை மைதானத்தை கல்லூரி அதிபர் தலைமையில் கல்லூரி முகாமைத்துவம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சபை மேற்கொள்ளவேண்டும் ஆனால் அதற்கு மாறாக மாவனல்லை சாஹிரா கல்லூரி மைதான புணரமைப்பு பணிகளை பாடசாலைக்கு வெளியில் உள்ள ஒருவரினால், அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின், புனர் நிர்மாணம் செய்யப்பட்ட விளையாட்டு மைதானம் பொது மக்களிடத்தில் கையளிக்கப்பட்டது. பதுரியா மத்திய கல்லூரியின் புணரமைப்பு பணிகளை பாடசாலை அபிவிருத்தி சபை மேற்கொண்டிருந்தது.
சாஹிரா கல்லூரி மைதானம் பராமரிப்பற்ற நிலையில் புற்கள் வளர்ந்து மேடு பள்ளமாகவும் குண்டும் குழியுமாகவும் காணப்படுகின்றது. மழை காரணமாக தண்ணிர் தேங்கி நிற்பதுடன் தண்ணீர் வடிந்து செல்ல சரியான முறையில் மைதானம் புணரமைக்கப்படவில்லை.
மைதானத்தினை புணரமைக்க மைதானத்தில் போடப்பட்ட மண் சரியான தரத்தில் போடப்பட்டுள்ளதா?மைதானம் முழுவதும் சரியான மட்டத்தில் மண் போடப்பட்டுள்ளதா? எத்தனை டிப்பர் மண் போடப்பட்டுள்ளது? என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் சிறப்பு நிபுணத்துவம் வாய்ந்த பொறியாளர்களிடமோ அல்லது மைதானம் தொடர்பான நிபுணர்களிடமோ சாஹிரா கல்லூரி மைதானம் தொடர்பில் எந்தவிதமான ஆலோசனைகளும் பெறப்படவில்லை.
முக்கிய விடயம் என்னவேன்றல் சாஹிரா கல்லூரி மைதான புணரமைப்பு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு அதற்கான பணத்தையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளனர்.
70 இலட்சம் ரூபாவில் 50 இலட்சம் ரூபா கேகாலை மாவட்ட செயலகத்தினாலும் 20 இலட்சம் ரூபா மாவனல்லை பிரதேச செயலகத்தினாலும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்ட செயலகத்தினாள் 4,998,855.81 ரூபா பணம் பெற்றுக்கொண்டமைக்காண ஆதாரம் கீழ் இணைக்கப்டுள்ளது. மாவனல்லை பிரதேச செயலகத்தினாள் 20 இலட்சம் ரூபா பெற்றுக்கொண்டாமைக்கான ஆதாரத்தை எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
ஹிங்குலோய கிராமிய அபிவிருத்தி சங்கம் என்ற அமைப்பின் பெயரில் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிலும் வேடிக்கையான விடயம் என்னவேன்றால் மாவனல்லை சாஹிரா கல்லூரியில் வேலைசெய்கின்ற பியுன் ஒருவரின் பெயரிற்கே இந்த பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையாகு ம்.
இந்த ஹிங்குலோய கிராமிய அபிவிருத்தி சங்கம் என்ற அமைப்பு எப்போது எங்கு யாரால் நிறுவப்பட்ட அமைப்பு என்று எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. எனவே இந்த அமைப்பு சட்டரீதியான அமைப்பா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் இந்த ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது மாவனல்லை சாஹிரா கல்லூரி மைதானத்தின் பணிகள் பூர்த்தி அடைந்துள்ளது என்பது நிருபனமாகின்றது. அப்படியாயின் ஏன் இன்னும் சாஹிரா கல்லூரி மைதானத்தை உத்தியோகபுர்வமாக பொதுமக்களிடம் கையளிக்கப்படவில்லை என்பது சந்தேகத்தை எழுப்புகின்றது.
சாஹிரா கல்லூரி அதிபரினால் பாடசாலை மைதானத்தை ஒப்படைக்குமாறு கடந்த 4 மாதங்களாக கேகாலை மாவட்ட செயலகத்திற்கு கடிதம் மூலம் அறிவித்தும் இன்னும் அதற்கான எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது சாஹிரா கல்லூரி மைதானத்தினை புணரமைக்க அரசாங்கம் வழங்கிய நிதி சரியான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதா? அவ்வாறு இல்லாவிடின் பொதுமக்களின் பணத்திற்கு என்ன நடந்தது? சரியான தரத்தில் புணரமைக்கப்பட்டதா? என்பதை மாவனல்லை சாஹிரா கல்லூரி சமூகம், ஊர்வசிகள், பழைய மாணவர்கள் ஆகியன தேடி பார்க்கவேண்டும்.
அவ்வாறு எதாவது பிழை நடந்திருந்தால் குற்றவாளிகளை இணங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்.
இர்பான் மொஹம்மத்
பழைய மாணவன்
சாஹிரா கல்லூரி - மாவனல்லை
No comments:
Post a Comment