கிழக்கு மாகாணம் நாட்டுக்கு முன்னுதாரணம்: லாஹிர் - sonakar.com

Post Top Ad

Wednesday, 30 December 2015

கிழக்கு மாகாணம் நாட்டுக்கு முன்னுதாரணம்: லாஹிர்


கிழக்கு மாகாணம் பல இனங்களையும்,பல மொழி பேசுகின்ற மக்களையும்,பல கலாச்சாரங்களையும் கொண்டதோடு நாட்டுக்கும் கிழக்கு மாகாணம் முன்னுதாரனமாக திகழ்கின்றது என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பன்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பன்மைத்துவ கலாச்சார நிகழ்வு செவ்வாய் கிழமை(29)திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவத்தின் போதே கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.         


அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்:கிழக்கு மாகாணத்தின் அனைத்து மக்களும் நிம்மதியாகவும், சந்தோசத்துடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் இதனை சிறப்புர மேம்படுத்த  இலங்கையின் சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும்,பிரதமரும் ,பாடுபட்டு வருகின்றார்கள்.அதேபோன்றுதான் கிழக்கு மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டிருப்பவரும் ஒரு சிறந்த மூத்த நிர்வாக அதிகாரியாகும் இவரை நமது மாகாணம் மட்டுமன்றி முழு இலங்கையுமே சந்தோசப்படப் படவேண்டும்.இலங்கை நமது தாய் நாடு இங்கு இங்கு பல்லினா சமூகம்  வாழ்ந்து வருகின்ற நிலையில் இங்கு பல இனங்களும், பல பிரதேசங்கள்,கலாச்சாரச்களும் இணைந்து இலங்கையர் என்ற அடையாளத்தை வெளிக்காட்டும் . 

என்றும் கிழக்கு மாகாணத்தில் இருகின்ற நிர்வாக அதிகாரிகள் முழுமையான சேவையை வழங்குகின்ற போதுதான் கிழக்கு மாகாணம் வினைத்திறன் மிக்க சேவையாக மாறும் எனவேதான் உங்களை எமது மாகாணம் எதிர்பார்த்து நிற்கின்றது.அத்தோடு மக்காளுக்கான சேவைகளின் போது அரசியல் வாதிகளை விடவும் உங்களால் செய்ய முடியும் என்றார்.                             

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ,கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி,மாகாண வீதி அபிவித்தி அமைச்சர் டபிள்யு.ஜி.எம்.ஆரியவதி கலப்பதி,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜெனார்த்தனன் உட்பட நிர்வாக அதிகாரிகள் உட்பட பல்லின மக்களும் கலந்து கொண்டார்கள். 

-எப்.முபாரக்  

No comments:

Post a Comment