மஹிந்த ஆதரவாளர்கள் தேர்தல் ஒன்றில் வெற்றி பெறுவதற்கு எடுக்கும் இறுதி முயற்சியாகக் கணிக்கப்படும் உள்ளூராட்சித் தேர்தலில் புதிய கட்சி அல்லது கூட்டணியைத் தோற்றுவிக்கும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்ற வருகின்றன.
இந்நிலையில், இதற்கு மஹிந்த ராஜபக்சவும் ஆதரவளிப்பார் என பரவலாக அவரது ஆதரவளர்கள் தெரிவித்து வருகின்றனர். எனினும், இது குறித்து தொடர்ந்தும் நேரடியாக பதில் வழங்காதிருக்கும் மஹிந்த ராஜபக்ச, ஊருபொக்க பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து புதிய கட்சி வரவும் கூடும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அங்கு பத்திரிகையாளர் ஒருவர் வினவிய போது பதிலளித்த மஹிந்த, கட்சியில் உள்ளவர்களை விரட்டினால் அவர்களுக்கு ஒரு கட்சி தேவைப்படும் என்பதால் புதிய கட்சி தோற்றம் பெறுவதைத் தவிர்க்க முடியாது என தெரிவித்துள்ளார். இதேவேளை, தான் எப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எனவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment