அஸ்கிரி விகாரைப் பகுதியில் சட்டவிரோதமாக எழுப்பப்பட்டிருக்கும் கட்டிடம் ஒன்று தொடர்பாக நடவடிக்கை எடுக்கச் சென்ற பொலிசாருடன் அங்கிருந்த பௌத்த துறவிகள் முறுகலில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கண்டி நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த கட்டிடம் நீக்கப்பட வேண்டும் என பொலிசார் தெரிவித்த போதிலும் கட்டிடத்தை அகற்ற அனுமதிக்க முடியாது என துறவிகள் சிலர் மறுத்ததையடுத்து குறித்த முறுகல் இடம்பெற்றுள்ளது.
அவ்விடத்தில் அனுமதியின்றி வர்த்தக நிலையம் ஒன்று இயங்கிவருவதாக அஸ்கிரிய விகாரை நிர்வாகமே முறையிட்டிருந்த போதிலும் பொலிசார் அங்கு சென்ற போது அது சமய விவகாரங்களுக்குப் பயன்படும் இடம் என பெயர்ப்பலகை சூட்டப்பட்டிருந்துள்ளமை குறிப்பிபிடத்தக்கது.
No comments:
Post a Comment