கல்முனை மாடர்ன் முன்பள்ளி மாணவர்களின் மலரும் மொட்டுக்கள் பிரியாவிடை நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் கல்முனை அல் பஹுரியா மகா வித்தியாலயத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில்க் மாடர்ன் முன்பள்ளி அதிபர் ஜனாபா. ஜெஸ்மின் உதுமாலெப்பை அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சமூக சேவகருமான கௌரவ ஏ.எம்.பரகத்துல்லாஹ் மற்றும் கௌரவ அதிதிகளாக பாடசாலையின் அதிபர் ஜனாப் எம்.ஐ. அப்துர் ரசாக் மற்றும் சமூக சேவகரும் கிராம அபிவிருத்திக் குழு தலைவருமான ஜனாப் எம்.எம்.ஜமால்டீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதி கௌரவ ஏ.எம்.பரகத்துல்லாஹ் உரையாற்றும்பொழுது முன் பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் அர்பணிப்பு மிக்க சமூகத்தின் உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்யும் முன்பள்ளி ஆசிரியர்கள் எமது பிராந்திய சிறுவர்களின் எதிர்காலம் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக தமது பிரதம உரையை நிகழ்த்தினார்.
இறுதியாக அதிதிகளால் பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்கள் அனைவரும் பரிசீல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
-Mohamed Kamil
No comments:
Post a Comment