மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புகையிரத்தில் மோதுண்டு யானை ஒன்று உயிர் இழந்த சம்பவம் இன்று (29) அதிகாலை இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் புணானை மேற்கு தாளம்பஞ்சேனை பகுதியில் வைத்து இந்த காட்டு யானை புகையிரத பாதையை கடக்க முற்பட்ட போதே புகையிரதத்தில் மோதுண்டு உயிர் இழந்துள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கடுகதி புகையிரதத்தில் கூட்டமாக வந்த யானைகளில் ஒன்று புகையிரதப் பாதையினை கடந்து செல்ல முற்பட்ட போது புகையிரதத்தில் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.
-அனா
No comments:
Post a Comment