இளைஞர் சேவைகள் மன்றத்தின் “சிரம சக்தி” திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேசத்தில் கரப்பந்தாட்ட மைதானம் மற்றும் கடின பந்து கிரிக்கட் பயிற்சி கூடம் என்பவற்றை அமைக்கும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்தில் கல்முனைத் தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.தில்சாத்தினால் அண்மையில் அடிக்கல் நடப்பட்டு, நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவற்றின் நிர்மாணப் பணிகள் தற்போது அவரது நேரடிக் கண்காணிப்பில் பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
இவற்றை விளையாட்டு வீரர்களின் பாவனைக்காக கூடிய விரைவில் கையளிக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.தில்சாத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment