கந்தளாய் பேராறு-2 பகுதியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 December 2015

கந்தளாய் பேராறு-2 பகுதியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

கந்தளாய் பேராறு 02 பகுதியில் புதிய பள்ளிவாசல் ஒன்று இன்று ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி மக்களின் நீண்ட கால வேண்டுகோளுக்கினங்க ICA இன் உதவியேடு அஷ்ஷேக் - ஏ.ஆர்.எம்.நஸீர் (நத்வி) அவர்களின் மூலம் இப்பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்பேது மூதூர் நத்வதுல் உலமா அரபுக் கல்லூரியின் அதிபரும், ICA நிருவனத்தின் திருகோணமலை கிளை அமைப்பாளருமான அஷ்ஷேக் - எம்.எம்.கரீம் மெளலவி அவர்களும் கலந்து கொண்டார்.

மேலும் அவர் ; பள்ளிவாசல்களின் சிறப்புக்கள் மற்றும் கலந்துகொண்ட மக்களுக்கு இஸ்லாமிய சொற்பொழிவொன்றும் நிகழ்தினார்.

மேலும் அப்பிரதேச ஜும்மாப் பள்ளி தலைவர் அஷ்ஷேக் - கே.எம்.ஹனிபா மெளலவி அவர்களும் இப்பள்ளிவாசலின் அவசியத்தைப்பற்றி மிகத் தெளிவாக விவரித்தார். அப்பகுதி மக்கள் சுமார் 1km தூரம் ஜும்மாப் பள்ளிக்கு தொழுகைக்கு வருவதாகவும் இனிமேல் இவ்வாரான பிரச்சினையை எதிர்கொள்ளமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.


அப்பிரதேச மக்களிடம் இதுசம்பந்தமாக வினவியபோது; மழை காலத்திலும், றமழான் மாதத்திலும் மிகவும் கஸ்டப்பட்டு 1km தூரம் ஜும்மாப் பள்ளிக்கு தொழுகைக்கு செல்வதாகவும் இனிமேல் இவ்வாரான பிரச்சினைகள் இல்லை எனவும் குறிப்பிட்டனர். மேலும் இப்பள்ளியை அமைத்துத்தந்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்தனர்.

-என்.எம்.பாசில்

No comments:

Post a Comment